திருடிய கடையில் மீண்டும் திருடச்சென்று சிக்கிய திருடன்.. போலீஸில் ஒப்படைத்த கடை உரிமையாளர்

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர் அருகே ஏற்கனவே திருடிய கடையில் மீண்டும் திருட சென்று மாட்டிக்கொண்ட நபரை நம்பியூர் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
கைதானவர்
கைதானவர்புதியதலைமுறை
Published on

செய்தியாளர் - சுப்ரமணியம்

---

ஈரோடு கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர் பகுதியில் கோவை செல்லும் சாலையில் சக்திவேல் என்பவர், சக்தி மோட்டார் மற்றும் சக்தி ஏஜன்சிஸ் என்ற பெயரில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார்.

கடந்த 7ம் தேதி இவரது கடைக்கு இருசக்கர வாகனத்துக்கு உதிரி பாகங்கள் கேட்டு, சிகப்பு நிற சட்டை அணிந்த ஒருவர் சென்றுள்ளார். அப்போது மற்றொருவர் கடைக்கு வந்து பொருட்கள் கேக்கவே, அங்கு பணிபுரியும் பெண் ஊழியர் அவர்களுக்கு உதிரி பாகங்களை எடுத்துக் கொண்டிருக்கும்போது, சிகப்பு நிற சட்டை அணிந்திருந்த அந்த நபர் யாரும் பார்க்காத நேரத்தில் கடையில் இருந்த பேட்டரியை லாவகமாக திருடி எடுத்து தனது ஆடைக்குள் மறைத்து வைத்துக்கொண்டார்.

இது குறித்து கடை உரிமையாளர் சக்திவேல் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, அதில் சிவப்பு நிற சட்டை அணிந்திருந்த ஒருவர் உதிரி பாகத்தை திருடி செல்லும் சிசிடிவி காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர், சக்திவேல், நம்பியூர் காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சிகளை கொடுத்து நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கடையில் திருடி சென்ற நபரை தேடி வந்துள்ளனர்.

கைதானவர்
மேம்பால தடுப்புச் சுவர் மீது ஆட்டோ மோதி விபத்து: கீழே விழுந்து ஒருவர் உயிரிழப்பு

இந்தநிலையில் மீண்டும் நேற்று சக்திவேலின் கடைக்கு சென்ற ஒருவர், இருசக்கர வாகனத்திற்கு டேங்க் கவர் வேண்டுமென கேட்டுள்ளார். அப்போது சக்திவேல் மற்றும் கடை ஊழியர் டேங்க் கவர் எடுக்க சென்றபோது கடை முன்பு வைத்திருந்த பொருட்களை அந்நபர் எடுக்க முயற்சி செய்துள்ளனர். இதை அறிந்த சக்திவேல் மற்றும் கடை ஊழியர் அவரை மடக்கிப்பிடித்து விசாரணை செய்தனர். அப்போது திருட முயன்ற நபர், தர்மபுரியைச் சேர்ந்த கணபதி என்பதும், அவர் நம்பியூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்ததாகவும், இதற்கு முன்பு கடந்த 7 தேதி அதே கடையில் பேட்டரி ஒன்றை திருடி சென்றதும் தெரியவந்தது.

பின்னர் மறைத்து வைத்திருந்த பேட்டரியை எடுத்துக்கொண்டு, மீண்டும் சக்திவேலின் கடைக்கு சென்று வேறு ஏதாவது கிடைக்குமா என பார்த்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது, தொடர்ந்து கடை உரிமையாளர் சக்திவேல் அவரை பிடித்து நம்பியூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த நிலையில், காவல்துறையினர் கணபதியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

கைதானவர்
தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு; கடந்து வந்த பாதை..காத்திருக்கும் சவால்கள் என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com