வீடு கட்டுமானத்திற்கு தோண்டப்பட்ட குழியில் தேங்கிய மழை நீர்... தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை பலி!

ராமநாதபுரம் மாவட்டம் ராஜசிங்கமங்கலம் அடுத்த கள்ளிக்குடி கிராமத்தில், வீட்டின் கட்டுமானத்திற்காக தோண்டப்பட்ட குழியில் தேங்கிய மழை தண்ணீரில் தவறி விழுந்து ஒன்றை வயது குழந்தை பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
new home
new homefile image
Published on

ராமநாதபுரம் மாவட்டம் ராஜசிங்கமங்கலம் அடுத்த கள்ளிக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கர்ணன். இவருக்கு ஒன்றை வயதில் கபிலன் என்ற மகன் இருந்தார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த வெண்ணிலா என்பவர் தனக்கு சொந்தமான இடத்தில், புதிய வீடு கட்டுவதற்கு குழி ஒன்று தோன்டி இருந்தார்.

நேற்று பெய்த கனமழை காரணமாக அந்த குழியில் மழை நீர் தேங்கி குழி தெரியாதவாறு இருந்துள்ளது. இதனை அறியாத கர்ணனின் மகன் கபிலன், அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருக்கும்போது குழிக்குள் மழை நீர் தேங்கி இருந்தது தெரியாமல், குழிக்குள் தவறி விழுந்துள்ளார்.

new home
’அம்மாவுக்கு என்னைப் பிடிக்காது’ - எப்போதும் தனிமையில் வாடும் 4 வயது குழந்தையின் கண்ணீர் வீடியோ!

இதனைக் கண்ட அவரது உறவினர்கள், கபிலனை மீட்டு திருவெற்றியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு கபிலனை சோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனை அடுத்து உயிரிழந்த சிறுவன் கபிலனின் உடலை அவரது சொந்த ஊரான கள்ளிக்குடிக்கு எடுத்து வந்து இறுதி சடங்குகளை செய்தனர். இது தொடர்பாக திருப்பாலைக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

new home
'9 கி.மீ தூரம், 4 மணி நேரம்' இறந்தவரின் உடலை டோலி கட்டி சுமந்து சென்ற அவலம்- மலைக்கிராம சோகம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com