மன்னார்குடி காவல்நிலையத்தில் இருந்து பெருமாள் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகர காவல்நிலையத்தை சுத்தப்படுத்தும் பணி நேற்று நடைபெற்றது. அப்போது, பாலிதீன் பையில் சுற்றி வைக்கப்பட்டிருந்த பழமை வாய்ந்த ஐம்பொன் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதனால், சர்ச்சை எழுந்துள்ளது. கடத்தல்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சிலை நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல் காவல் நிலையத்திலேயே உள்ளதா என கேள்விகள் எழும்பியுள்ளது.
அது இல்லாமல் வேறு யாரேனும் காவல் நிலையத்தில் பதுக்கி வைத்தனரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வரு கிறது. 3 அடி உயரம் கொண்ட அந்தச் சிலையின் மதிப்பு 10 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் எனக் கூறப்படுகிறது. காவல் நிலையத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலையை காவல் ஆய்வாளர் ராஜேந்திரன், மன்னார்குடி வட்டாட்சியர் கார்த்தியிடம் ஒப்படைத்தார்.