செய்தி எதிரொலி: உணவுப் பொருட்களை கழிவறைக்குள் வைத்து பாதுகாத்த முதியவருக்கு கிடைத்த உதவி

செய்தி எதிரொலி: உணவுப் பொருட்களை கழிவறைக்குள் வைத்து பாதுகாத்த முதியவருக்கு கிடைத்த உதவி
செய்தி எதிரொலி: உணவுப் பொருட்களை கழிவறைக்குள் வைத்து பாதுகாத்த முதியவருக்கு கிடைத்த உதவி
Published on

வறுமையின் காரணமாக முதியவர் ஒருவர் உணவுப் பொருட்களை கழிவறைக்குள் வைத்து பாதுகாக்கும் அவலம் குறித்து புதியதலைமுறையில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து அவரின் வீட்டை
காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா சீரமைத்துக் கொடுத்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் துளசாபுறம் ஊராட்சி கண்டிவாக்கம் கிராமத்தில் வசிப்பவர் கூலி தொழிலாளியான குப்பன். இவரது மனைவி இறந்து 30 ஆண்டுகள் கடந்து விட்டன. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு
வீட்டை விட்டுச் சென்ற அவரது மகனும் தற்போது எங்கு இருக்கிறார் என தெரியவில்லை எனச் சொல்லப்படுகிறது. இவர் தற்போது தனது 85 வயது தாய் ரஞ்சிதம் அம்மாளுடன் ஓலை குடிசை வீட்டில்
வசித்து வந்தார்.

முதியவர் குப்பனுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குடல் சம்பந்தப்பட்ட நோய் காரணமாக வயிற்றில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் அவரால் தற்போது எந்த வேலையையும்
செய்ய இயலாது எனச் சொல்லப்படுகிறது. ஊர் மக்கள் உதவியால் வாழ்வாதாரத்தைக் கடத்தி வரும் இவர்களின் வீட்டில் கதவு இல்லாததால் உணவுப் பொருட்களை எலி, பூனை உள்ளிட்டவை சாப்பிடும் சூழ்நிலை உருவானது. இதனால் அவர்கள் உணவுப் பொருட்களை அவர்கள் கழிவறைக்குள் வைத்து பாதுகாத்து வந்தனர். மேலும் முதியோர் உதவித் தொகைக்கு பலமுறை முயற்சித்தும் அவருக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை எனவும் கூறப்பட்டது.


இதனையடுத்து இந்தச் செய்தி புதியதலைமுறையில் ஒளிபரப்பப்பட்டது. இதனை பார்த்த காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா குப்பன் வீட்டிற்கு நேரில் சென்று அவருடைய வீட்டினை சீர்படுத்தி தந்துள்ளார். மேலும் அவருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்ததோடு, அவரின் அன்றாடத் தேவைக்கான அரிசி பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களையும் வழங்கியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com