வயதான தம்பதியை தரையில் படுக்கவைத்த அரசு மருத்துவமனை : மதுரையில் அவலம்

வயதான தம்பதியை தரையில் படுக்கவைத்த அரசு மருத்துவமனை : மதுரையில் அவலம்

வயதான தம்பதியை தரையில் படுக்கவைத்த அரசு மருத்துவமனை : மதுரையில் அவலம்
Published on

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள பார்வையில்லாத, ஆதரவற்ற தம்பதிக்கு படுக்கை வழங்காமல் தரையில் பாய் விரித்து படுக்க வைத்திருக்கும் அவலம் ‌மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் நிகழ்ந்துள்ளது.

மதுரை மாவட்டம் கேத்துவ‌ர்ப்பட்டியை சேர்ந்த பார்வையற்ற தம்பதி முத்து - ஒச்சம்மாள். ஒரே மகனையும், சொத்துக்காக ஊரார் கொலை செய்துவிட்டதாக கூறும், இந்த தம்பதி உணவுக்கு கூட வழியின்றி நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்திருந்தனர். அரை மயக்கத்தில் இருந்த அவர்களின் நிலை குறித்து மாவட்ட ஆட்சியர் ராஜசேகரிடம் அங்கிருந்த செய்தியாளர்கள் எடுத்துக்கூறினர். 

இதனையடுத்து முதியவர்கள் இருவரையும் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்க ஆட்சியர் அறிவுறுத்தினார். அங்கு, தம்பதிக்கு படுக்கை வழங்காமல், தரையில் பாய் விரித்து படுக்க வைத்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது. இதுகுறித்து மருத்துவமனை டீனிடம் கேட்டதற்கு இருவருக்கும் படுக்கை வசதி ஏற்படுத்தி தரப்படும் என தெரிவித்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com