மயிலாப்பூர் | 15 வயது சிறுவன், 9 வயது சிறுமிக்கு பெற்றோரே திருமணம் செய்து வைத்த அவலம்...!

குழந்தை திருமணம் செய்து வைத்த பெற்றோர்கள் மீது குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இரு குழந்தைகளின் பெற்றோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
மைலாப்பூர்
மைலாப்பூர்முகநூல்
Published on

செய்தியாளர் - அன்பரசன்

சென்னை மாவட்ட சமூக நல அலுவலர் ஹரிதா என்பவரை நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு மயிலாப்பூர் பகுதியில் கடந்த 10 ஆம் தேதி 9 வயது சிறுமிக்கும் 15 வயது சிறுவனுக்கும் அவர்களின் பெற்றோர்கள் ‘குழந்தை திருமணம்’ செய்து வைத்ததுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.

குழந்தை திருமணம்
குழந்தை திருமணம்கோப்புப்படம்

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஹரிதா, உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட சிறார்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் இரு வீட்டார் சம்மதத்துடன் குழந்தைகள் திருமணம் நடந்து முடிந்தது தெரிய வந்தது. இதனையடுத்து ஹரிதா, மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி சிறுமி மற்றும் சிறுவனை‌ மீட்டு கெல்லீஸ்சில் உள்ள சிறார் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.‌

மைலாப்பூர்
மதுரை நாதக நிர்வாகி கொலை : ஸ்கெட்ச் போட்டது இவர்களா? சொத்துப் பிரச்னைக்குதான் இவ்வளவுமா? உண்மை என்ன?

இந்த நிலையில், சிறுமியின் தாய், தந்தை, மற்றும் சிறுவனின்‌ தந்தை ஆகியோர் மீது குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், குழந்தைகள் இருவரின் பெற்றோருக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com