தமிழ்நாட்டில் ரம்ஜான் பண்டிகை தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்களின் புனித ரம்ஜான் நோன்பு கடந்த மாதம் தொடங்கியது. அன்றுமுதல் இன்றுவரை இஸ்லாமியர்கள் பலரும் தினமும் நோன்பு இருந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பிறை தென்படாததால் நாளை தமிழகத்தில் ரமலான் திருநாள் கொண்டாடப்படும் என தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து தமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

ரம்ஜான்
ரமலான் காலத்தில் இஸ்லாமியர்கள் பேரீச்சம்பழம் மூலம் நோன்பு துறப்பது ஏன்? ஆரோக்கிய பின்னணி இதுதான்!

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல்கள், பொது இடங்களில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து உற்றார் உறவினர்களுன் பண்டிகை கொண்டாட தயாராகி வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com