ஈரோடு இடைத்தேர்தல்: `வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது’ – ஓபன்னீர்செல்வம் நம்பிக்கை

ஈரோடு இடைத்தேர்தல்: `வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது’ – ஓபன்னீர்செல்வம் நம்பிக்கை
ஈரோடு இடைத்தேர்தல்: `வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது’ – ஓபன்னீர்செல்வம் நம்பிக்கை
Published on

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பிரகாசமாக உள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சென்னையில் இருந்து தேனி செல்லும் முன் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம், “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்” என தெரிவித்தார்.

மேலும் பேசுகையில், தங்களோடு தொடர்ந்து இணக்கமாக உள்ள, கூட்டணியை விரும்பும் கட்சிகளுடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பதாகவும், உறுதியான ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பிரகாசமாக உள்ளதாகவும் கூறினார்.

நேற்றைய தினம்தான் செய்தியாளர் சந்திப்பொன்றில் பேசிய ஓபிஎஸ், “மக்கள் நலனை கருதில் கொண்டு அதிமுக எந்த நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ எந்த நிலையை மறுக்கின்ற தலைவர்கள் ஒத்துக் கொண்டால் ஒரு உறுதியான நிலை ஏற்படும். ஒன்றிணைய வேண்டும் என்பதை தான் தொண்டர்கள் விரும்புகின்றனர். அதைத்தான் நாங்களும் சொல்கின்றோம்.

எடப்பாடி பழனிசாமி தனி வழி என்கிறார். பாதை மாறிப் போனால் ஊர் வந்து சேராது. எடப்பாடி பழனிசாமி என்றைக்குமே ஊர் வந்து சேர மாட்டார். எங்களுடைய பண்பாடு நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து கூட்டணி கட்சிகளை சந்திக்கிறோம். அவர்கள் எப்படி என்று தெரியவில்லை" என்று கூறியிருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com