கோயமுத்தூரில் ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் புதிதாக பணியில் சேர்ந்த செவிலி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனையில் கடந்த மாதம் பணியில் சேர்ந்த சவும்யா விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக உடன் பணியாற்றுபவர்கள் தெரிவித்தனர். சவும்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில் சக பணியாளர்களும் உடன் படித்த மாணவிகளும் அங்கு திரண்டனர். சவும்யா இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் தங்கள் மகள் இறப்பு குறித்து மருத்துவமனை நிர்வாகம் உரிய விளக்கம் தரவில்லை என அவரது பெற்றோர் குற்றஞ்சாட்டினர். இதற்கிடையில் சவும்யா கடைசியாக செல்போனில் தொடர்பு கொண்டவரை கண்டறிந்து விசாரணை நடத்த உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.