காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போட்ட செவிலியர்.. கடலூரில் அதிர்ச்சி சம்பவம்!

கடலூரில் காய்ச்சல் ஏற்பட்ட குழந்தைக்கு நாய்க்கடி ஊசி போட்ட செவிலியர் கண்ணகி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் கோதண்டராமபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாகரன். இவருடைய 13 வயது மகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக மகளை, கடலூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது மருத்துவர், சிறுமியைச் சோதித்துவிட்டு காய்ச்சலுக்கு ஊசி எழுதிக் கொடுத்துள்ளார். ஆனால், அதனைப் போடாமல் செவிலியர் கண்ணகி நாய்க்கடி ஊசி போட்டுள்ளார். மேலும், கோதண்டராமனிடம் ’இதுகுறித்து வெளியே சொல்ல வேண்டாம்’ எனவும் செவிலியர் கூறியுள்ளார். இதனால் கோபமுற்ற கோதண்டராமன் கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதேசமயத்தில் மருத்துவமனை நிர்வாகம் இதுகுறித்து விசாரணை தொடங்கியது. விசாரணையில் உண்மை என தெரியவந்ததை அடுத்து, செவிலியர் கண்ணகியை மருத்துவமனை இணை இயக்குநர் சாரா பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com