“ஸ்டாலினும், உதயநிதியும் சொன்னதை நிறைவேற்றி விட்டார்களா?” – சீமான் கேள்வி

“ஒத்தையடி பாதையில் செல்லும் என்னை 8 வழிச்சாலையில் அழைத்துச் செல்வது திமுக, பாஜகதான். நாங்க குத்துப்பாட்டு போட்டு கூட்டத்தை கூட்டவில்லை” என கோவில்பட்டியில் நடைபெற்ற கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
Seeman
Seemanfile
Published on

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் முத்துக்குமார் 15வது ஆண்டு வீரவணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று முத்துக்குமார், பழனிபாபா ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செய்தார்.

இதைத் தொடர்ந்து அங்கு பேசிய அவர், “கட்சி தொடங்கியது முதல் கூட்டணி இல்லை. தனித்துதான் எங்கள் பயணம். மக்களை நம்புகிறோம். அவர்கள் எங்களை கைவிட மாட்டார்கள். தோற்றாலும், வெற்றி பெற்றாலும் தனித்துதான் என்று வரலாறு பேசும். நாம் தமிழர் கட்சிக்கு கூடும் கூட்டத்தைக் கண்டு மற்ற கட்சிகள் கலக்கம் கொள்கின்றனர். இது கொள்கைக்காக கூடும் கூட்டம்.

Seeman
திமுக - காங்கிரஸ் இடையேயான பேச்சுவார்த்தையில் பேசப்பட்டது என்ன? - லிஸ்ட் போட்ட கே.எஸ். அழகிரி!

திமுக, கட்சி கிடையாது.. அது ஒரு கம்பெனி. கருணாநிதி குடும்பத்தின் சொத்து. ஒரு ரூபாய் காசு கொடுக்காமல் மற்ற கட்சிகளால் ஓட்டோ அல்லது கூட்டத்தையோ கூட்ட முடியாது.

அதிமுக, திமுக தலைவர்கள் தமிழர்கள் கிடையாது. நாம் தமிழர் கட்சியைதான் மக்கள் தமிழர்களாக பார்க்கின்றனர்.

நாம் தமிழர் செய்வதுதான் புரட்சி. திமுக, அதிமுக கட்சிகள் 2026-க்கு பிறகு ஒரு குச்சியாக கூட இருக்காது. ஒத்தையடி பாதையில் செல்லும் என்னை 8 வழிச்சாலையில் அழைத்துச் செல்வது திமுக, பாஜகதான்.

mk stalin, pm modi, udhayanidhi stalin
mk stalin, pm modi, udhayanidhi stalinpt web

ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் சென்ற பிரதமர் மோடி ஏன் திருச்செந்தூர் செல்லவில்லை? ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு. நாங்க குத்து பாட்டு போட்டு கூட்டத்தைக் கூட்டவில்லை, திமுக மாநாட்டில் காவாலா பாட்டு போட்டு கூட்டத்தைக் கூட்டுகின்றனர். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் கள்ளுக் கடைகளை (பனை - தென்னை பால்) திறப்போம் - டாஸ்மாக் கடைகளை மூடுவோம்.

மு.க.ஸ்டாலின் - உதயநிதி ஸ்டாலின் சொன்னதை நிறைவேற்றி விட்டார்களா? கூட்டுறவு வங்கியில் வைத்த நகைக் கடனை தள்ளுபடி செய்து விட்டார்களா? சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தமிழர்கள் இல்லை என்ற வருத்தம் வேண்டாம். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் 11 பேரும் தமிழர்கள்தான். நாமும் சேர்ந்து விளையாடுவோம். ‘மோடிக்கும், EDக்கும் அஞ்சமாட்டோம்’ என்று கூறிய தந்தையும், மகனும் காலை பிடித்துக் கொண்டு இருக்கின்றனர்.

PM Modi
PM Modipt desk

கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்க பிரதமரை அழைத்தது ஏன்? கேலோ என்பது இந்தியில் விளையாட்டு என்று அர்த்தம். இந்தி தெரியாது போடா என்று கூறியவர்கள், ஆட்சிக்கு வந்ததும் இந்தியை வாடா என்கின்றனர். முதல்வராக வேண்டும் என்பதற்காகதான் கட்சி ஆரம்பித்து இருக்கிறேன். தவிர முச்சந்தியில் நிற்க கிடையாது” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com