திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அம்பலூர் பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன், இவர் கடந்த 2018ஆம் ஆண்டிலிருந்து நாம் தமிழர் கட்சியின் திருப்பத்தூர் வடக்கு மாவட்ட செயலாளராக இருந்து வரும் நிலையில், தேவேந்திரன் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் 10க்கும் மேற்பட்டோர், கட்சியில் இருந்து விலகுவதாக, வாணியம்பாடியில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய தேவேந்திரன், நாம் தமிழர் கட்சியில் நம்பிக்கை தன்மை இழந்து விட்டதாகவும், யாரிடமும் கூட்டு வைக்கவில்லையெனவும், தமிழ் தேசியத்தை ஏற்றுக்கொண்டு பயணிக்கவில்லை மற்றும் படித்தவர்களை வேட்பாளராக முன்நிறுத்திய போது, அதை சீமான் மறுத்ததால் கட்சியில் இருந்து விலகுவதாக கூறினார்.
அப்போது அங்கு வந்த நாம் தமிழர் கட்சியினர் தேவேந்திரனிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர், நாம் தமிழர் கட்சி வாணியம்பாடி தொகுதி குருதி பாசறை பொறுப்பாளர் நாகராஜ் என்பவர் தேவேந்திரனிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டது மட்டுமில்லாமல் சரமாரியாக தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வாணியம்பாடி நகர காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.