“அண்ணன், தம்பி என்பது வேறு.. கொள்கைன்னு வந்துட்டா..” - விஜய்யை கடுமையாக விமர்சிக்கும் சீமான்!

“அண்ணன், தம்பி என்பது வேறு; கொள்கைன்னு வந்துட்டா... பகை பகைதான்” என்று மீண்டும் விஜய்யை கடுமையாக விமர்சித்திருக்கிறார் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
தவெக விஜய் - நாதக சீமான்
தவெக விஜய் - நாதக சீமான்புதிய தலைமுறை
Published on

சில வாரங்களுக்கு முன்பு, “விஜய்யின் கொள்கை ஆயிரம் இருக்கட்டும். ஆயிரம் இருந்தாலும் அவர் என் தம்பி. என்னை எதிர்த்தே வேலை செய்தாலும் நான் அவரை ஆதரிப்பேன்” என்று பேசியவர்தான் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்.

ஆனால், விஜய் எப்போது தன் கட்சிக் கொள்கையை அறிவித்தாரோ அதன்பிறகு தொடர்ந்து பல மேடைகளில் விஜய்யை கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் சீமான்.

இந்தவகையில், நாதக சார்பில் நேற்று நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், ”வேலுநாச்சியார் யார் தெரியுமா உங்களுக்கு (விஜய்)? கணவர் உடல் மீது சத்தியம் செய்து கைக்குழந்தையை தோளில் உப்பு மூட்டை போல கட்டிக்கொண்டு, இழந்த நிலத்தை நான் மீட்டே தீருவேன் என்று உறுதி எடுத்துச் சென்று... சொன்னதை செய்து வென்று முடித்த வரலாறுதான் தமிழின வரலாறு” என்று பேசியிருந்தார்.

ஆனால், இது வேலுநாச்சியாரின் கதை இல்லை; மாறாக ஜான்சி ராணியின் கதை. இதை தமிழின வரலாறு என குறிப்பிட்டு பேசிய நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானை நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

தவெக விஜய் - நாதக சீமான்
“ப்ரோ... எங்கள் லட்சியத்திற்கு எதிராக பெற்ற தகப்பனே வந்தாலும் எதிரிதான்” - விஜய்யை விமர்சித்த சீமான்

இது ஒருபுறம் இருக்க... இன்று மீண்டும் தவெக தலைவர் விஜய்யை மிகக் கடுமையாக தாக்கி பேசியுள்ளார் சீமான்.

செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசிய சீமான், “திராவிடம் என்றால் என்ன? தமிழ் தேசியம் என்றால் என்ன? விஜய் விளக்குவாரா? விஷமும் விஷத்தை முறிக்கும் மருந்தும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்? வில்லனும் கதாநாயகனும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்? கொலைகாரன்கூட ஒருவனைத்தான் கொல்வான், குடித்தால் பல பேர் தாலி அறுபடும் என மதுக்கடைகளை மூடச் சொல்வது தமிழ் தேசியம்.

சமூக நீதியை பேசுகிறார் தம்பி விஜய். அதை திமுகவும்தான் பேசுகிறது. ஆனால், அதை பின்பற்றவில்லை. பாஜக மதவாதம் என்பதுபோல அவர் கருத்து தெரிவித்துள்ளார். எனில் காங்கிரஸ் என்ன, மிதவாதமா? ஊழல் குற்றச்சாட்டுகள் உடைய ஆதிமுக ஆட்சியை ஏன் விஜய் விமர்சிக்கவில்லை? காங்கிரஸூம், அதிமுகவும் உங்களுக்கு எதிரி இல்லையா?

தவெக விஜய் - நாதக சீமான்
திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு... சிக்கிய 150 பேர்... கயிறு கட்டி மீட்ட தீயணைப்புத்துறை!

மும்மொழிக் கொள்கை என்பது மோசடி கொள்கை, இரு மொழி கொள்கை என்பது ஏமாற்று கொள்கை. தமிழ் எங்கள் கொள்கை. தமிழ் பயிற்று மொழி, ஆங்கிலம் பயிற்று மொழி. ஆனால் வேண்டுமென்றால் பிற மொழிகளை கற்கலாம்.

தமிழக வெற்றிக்கழகத்தின் மொழிக்கொள்கை தவறாக உள்ளது. கொள்கையை மாற்றுங்கள் அல்லது எழுதி கொடுப்பவரை மாற்றுங்கள். எங்களைப் பொறுத்தவரை கொள்கை கோட்பாடுகளை தவிர குடும்ப உறவு முக்கியமில்ல. தம்பி என்பது வேறு, கொள்கை என்பது வேறு...

நான் ஒவ்வொருமுறையும் சொல்வது குட்டிக்கதை அல்ல, வரலாறு. ஆந்திராவில் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது, மீனவர்கள் பிரச்னை போன்றவற்றில் விஜய்யின் நிலைப்பாடு என்ன?

விஜய்யும் அண்ணன் திருமாவளவனும் ஒரே மேடையில் சந்திப்பதாக செய்திகள் வருகின்றன. தவெகவும் விசிகவும் எந்த நேரத்திலும் கூட்டணி அமைக்காது. அண்ணன் திருமாவளவன் சிறுபிள்ளைத்தனமான அந்த தவறை செய்யமாட்டார்.

அண்ணன் என்ன? தம்பி என்ன? ரத்த உறவை லட்சிய உறவுதான் மேலானது. குடும்ப உறவை விட கொள்கை உறவுதான் மேலானது” என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து தவெக-வின் முதல் மாநாட்டிற்கு அதிகம் பேர் வந்தது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு சீமான், “கூட்டம் யாருக்கு வேண்டுமானாலும் வரும், நயன்தாரவுக்குகூட 4 லட்சம் பேர் கூடினார்கள். அரசியலில் விஜயகாந்துக்கு கூடாத கூட்டமா விஜய்க்கு கூடியது?” என்றார்.

தவெக விஜய் - நாதக சீமான்
மதுரை: “மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை” - இறந்தவரின் சடலத்தை வயல்வெளியில் கொண்டு சென்ற அவலம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com