செய்தியாளர்: செ.சுபாஷ்
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாற்றினார்.
அவர் பேசுகையில்..
பிரதமர் மோடி வெளிநாடு சென்றால் உலகின் மூத்த மொழி தமிழ் என்று பேசி வருகிறார். முதல்வர் அமெரிக்கா சென்று அங்குள்ள தமிழர்களிடம் தமிழின் பெருமை பற்றி பேசுகிறார். ஆனால், தமிழகத்தில் என்றாவது பேசியதுண்டா?
தன் தாய் மொழியை மீட்க தமிழ் பிள்ளைகள் போராட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். தற்போது தெருக்கள், சாலைகள், காலனிகள் எல்லாம் ஆங்கிலத்தில் அழைக்கும் நிலை உருவாகியுள்ளது.
காமராஜர் தோற்கடிக்கப்பட்டதற்கு காரணம் திராவிடம் அல்ல தமிழ் மீது கொண்ட பற்று தான் காரணம். உலகில் எல்லா மொழிகளும் மனிதனால் பேசப்பட்டது. தமிழ் ஒன்று தான் இறைவனால் பாடப்பட்டது கீழடியில் 2 ஏக்கர் மட்டுமே தோண்டப்பட்டுள்ளது. அங்குள்ள 100 ஏக்கர் நிலங்களையும் தோண்டி ஆய்வு நடத்த வேண்டும் அப்போதுதான் தமிழனின் முழுமையான வரலாறு தெரியும்.
சமூக வலைதளங்களில் பாருங்கள் சீனர், ஜப்பானியர்கள் என அனைவரும் அழகாக தமிழ் பேசுகிறார்கள். ஆனால், நம்மிடத்தில் தமிழ் இல்லை. அதனால் நாம் தமிழர்கள் இல்லை. மற்ற மொழிகள் எல்லாம் பிற மொழிகளில் தொடர்பால் உருவானது எந்த மொழியின் தொடர்பும் இல்லாமல் இயங்கும் ஒரே மொழி தமிழ். நான் அரசியலில் வருவதற்கு முன் தொலைக்காட்சிகளில் லைவ் என்று ஓடியது. நான் வந்த பிறகுதான் நேரலை என்று ஓடுகிறது. தாய்மொழியை மறந்து விட்ட இனம் சுடுகாட்டில் பிணம்.
சிதைந்து அழிந்து போன சமஸ்கிருத மொழியை உயிர்ப்பிக்க சமஸ்கிருதம் கட்டாயம் படிக்க வேண்டும் என்கிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழக்கு மட்டுமே முன்னுரிமை வழங்குவோம். தமிழ் படித்தால் தான் தமிழகத்தில் வேலை வாய்ப்பு என்ற நிலையை உருவாக்குவோம்.
டெல்லியிலிருந்து இந்தியிலும், ஆங்கிலத்திலும் கடிதம் வருகிறது. ஏன் தமிழில் கடிதம் அனுப்ப மாட்டீர்களா என கேட்க யாரும் முன்வரவில்லை. தாய் மொழி தமிழ் நம் கண் முன்னே அழிந்து போவதை வேடிக்கை பார்ப்பதா? இந்தி படித்தால் எல்லா இடங்களிலும் வேலை கிடைத்து விட்டதா? ஹிந்தி படித்தவன் தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் நுழைந்து விட்டான். மக்கள் விழிப்படையாவிட்டால் இந்தி படித்தவன் நாட்டை ஆள வந்து விடுவான்.”2026ல் எங்களுக்கு ஆதரவு கொடுங்கள்
முதலீடுகளை ஈர்த்து முதல்வர் மூட்டைகளை தூக்கி கொண்டு வந்து விடுவார். அதை நான் தான் சென்று இறக்க வேண்டும்.
மற்ற மொழிகளை எங்கள் வீட்டு ஜன்னலாக வைத்துக் கொள்கிறோம். ஆனால் தமிழை எங்கள் வீட்டு தலைவாசலாக வைத்துக் கொள்கிறோம். தமிழகத்தை தமிழர் ஆள வேண்டும் என்பதை மனதில் வைத்து 2026ல் எங்களுக்கு ஆதரவு கொடுங்கள்” என்று சீமான் பேசினார்.