பெப்சி, கோக் உள்ளிட்ட அந்நிய பானங்களை விற்பதில்லை: வணிகர் சங்கங்களின் பேரமைப்பு முடிவு

பெப்சி, கோக் உள்ளிட்ட அந்நிய பானங்களை விற்பதில்லை: வணிகர் சங்கங்களின் பேரமைப்பு முடிவு
பெப்சி, கோக் உள்ளிட்ட அந்நிய பானங்களை விற்பதில்லை: வணிகர் சங்கங்களின் பேரமைப்பு முடிவு
Published on

பெப்சி, கோக் உள்ளிட்ட அந்நிய குளிர்பானங்களை தமிழகத்தில் விற்பதில்லை என்று முடிவுசெய்யப்பட்டுள்ளதாக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி கோரி தமிழகம் முழுவதும் இளைஞர்கள் நடத்திய தன்னெழுச்சியான போராட்டத்தில் பீட்டா அமைப்புக்குத் தடை செய்ய வேண்டும் என்றும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில் பெப்சி, கோக் உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்களை விற்கக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது. ஜல்லிக்கட்டுக்காக தமிழக அரசு நிரந்தர சட்டம் நிறைவேற்றிய நிலையில் இளைஞர்கள் போராட்டம் கைவிடப்பட்டது. இந்தநிலையில், தமிழகத்தில் வரும் மார்ச் 1ம் தேதி முதல் பெப்சி, கோக் உள்ளிட்ட அந்நிய குளிர்பானங்களை விற்பதில்லை என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். இந்த குளிர்பானங்கள் உடலுக்கு தீங்குவிளைவிப்பதால் அவற்றை விற்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டதாக விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com