வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை, வட தமிழகத்தில் இயல்பை விட அதிகமாக பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம்
வானிலை ஆய்வு மையம் முகநூல்
Published on

தென்மேற்கு பருவமழை காலத்தில், இயல்பை விட 18 சதவீதம் அதிகமான மழை தமிழகத்தில் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் இயல்பை விட மிக அதிகமாகவும், 17 மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாகவும் மழை பதிவாகியிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்தாண்டு 74 சதவீதமும், நடப்பாண்டு 43 சதவீதமும் இயல்பை விட அதிகம் மழை பதிவாகி உள்ளதென்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

heavy Rain
heavy Rainpt desk

வடகிழக்கு பருவமழையை பொருத்தவரை, கேரளா, தமிழ்நாடு, தெற்கு கர்நாடகா, ஆந்திர;g பிரதேசம், ராயலசீமா ஆகிய பகுதிகளில் இயல்பை விட அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். அக்டோபர் 3-ஆவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் எனவும் அவர் கூறினார்.

வானிலை ஆய்வு மையம்
மரபியல் வலிமையை இழந்து அழிவை நோக்கிச் செல்லும் யானைகள்! வெளியான அதிர்ச்சிகர தகவல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com