சிக்கன் சாப்பிட்ட பின் வயிற்றுப் போக்கு, மூச்சுத் திணறல் ? - இளைஞர் உயிரிழப்பு

சிக்கன் சாப்பிட்ட பின் வயிற்றுப் போக்கு, மூச்சுத் திணறல் ? - இளைஞர் உயிரிழப்பு
சிக்கன் சாப்பிட்ட பின் வயிற்றுப் போக்கு, மூச்சுத் திணறல் ? - இளைஞர் உயிரிழப்பு
Published on

(கோப்பு புகைப்படம்)

ஸ்ரீபெரும்புதூரில் சிக்கன் சாப்பிட்ட பின்னர் ஏற்பட்ட தொடர் வயிற்றுப்போக்கு மற்றும் மூச்சுத் திணறலால் வடமாநில இளைஞர் உயிரிழந்துள்ளார்.

 ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் 20 வயது மதிக்கத்தக்க வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் வயிற்றுப்போக்கு மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக  அனுமதிக்கப்பட்டார். ஆனால் அந்த நபர் சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  அதற்கு முன், அந்த இளைஞர் சக நண்பர்களுடன் சேர்ந்து சிக்கன் எடுத்து சமைத்து சாப்பிட்டு உள்ளார்.

அதன்பிறகு அவருக்கு தொடர்ச்சியாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டதன் காரணமாக, சக நண்பர்கள் உதவியால் ஸ்ரீபெரும்புதூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். பின்னர் 45 நிமிடங்களில் அதிக அளவு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிர் பிரிந்துள்ளது.

அவரது இறப்பு தொடர்பாக மருத்துவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். அத்துடன் இறந்தவரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. ரத்த மாதிரி அறிக்கை வந்த பிறகே அந்த இளைஞர் எதனால் உயிரிழந்தார் என்பது தெரியவரும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com