வடசென்னையில் திமுக - அதிமுகவினரிடையே யார் முதலில் வேட்புமனு தாக்கல் செய்வது என்ற போட்டி நிலவியது.
இது குறித்து செய்தியாளர்களிடையே சேகர் பாபு பேசும்பொழுது, "நானும் எங்களது வேட்பாளரும் மனு தாக்கல் செய்வதற்காக சரியாக மதியம் 12 மணிக்கு சென்றோம். ஆனால் எங்கள் கட்சி தொண்டர், பத்துமணிக்கே காவல்துறை பதிவேற்றில் பதிவு செய்து இருந்தார். இதன்படி எங்கள் வரிசை எண் 2 அவர்களின் வரிசை எண் 7 அதன்படி நாங்கள் உள்ளே வேட்புமனு தாக்கல் செய்ய சென்றசமயம், எங்களுடன் அதிமுகவினர் கும்பலாக வந்துவிட்டு, அவரின் வேட்புமனுவை முதலில் பெறவேண்டும் என்று பிரச்சனை செய்ய ஆரமித்தனர்.”
எங்கள் முதலமைச்சர், எங்களிடம் “எதிலேயும் சட்ட விதிமீறல் கூடாது. அதிலேயும் எதிரிகள் திட்டமிட்டு கலவரம் ஏற்படுத்த கூடும், ஆகவே இந்த தேர்தலை அமைதியாக சந்திக்கவேண்டும். எங்கும் ஒரு சிறு அசம்பாவிதத்திற்கு இடம் அளிக்கக்கூடாது என்று கூறியுள்ளார். அவரின் ஆணையின் படி நாங்கள் நடந்து வருகிறோம்" என்றார்.