ஆளுநரை யாரும் கட்டயாப்படுத்த முடியாது: தமிழிசை

ஆளுநரை யாரும் கட்டயாப்படுத்த முடியாது: தமிழிசை
ஆளுநரை யாரும் கட்டயாப்படுத்த முடியாது: தமிழிசை
Published on

ஆளுநரை யாரும் கட்டயாப்படுத்த முடியாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழத்தில் நிலவும் குழப்பமான அரசியல் சூழலுக்கு ஆளுநர் தாமதப்படுத்துவதுதான் காரணமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு பதில் அளித்த தமிழிசை, ஆளுநர் தாமதப்படுத்தவில்லை என்றும், சரியான முடிவெடுக்க கால அவகாசம் எடுத்துக்கொண்டுள்ளார் என்றும் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ஆளுநரை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. பதவி பிரமாணம் செய்வது மட்டும் ஆளுநரின் பணி அல்ல. சுப்பிரமணியன் சுவாமியின் பாதை, தமிழக பாஜகவின் பாதையல்ல என்றும் அவரது கருத்தை தமிழக பாஜகவின் கருத்தாக எடுத்துக்கொள்ள முடியாது என்று கூறினார். முன்னதாக, தமிழக பொறுப்பு ஆளுநரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்பியும், மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி, சசிகலாவை பதவியேற்குமாறு ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com