"தண்ணீர் இல்லை வீட்டில் இருந்தே வேலை செய்யுங்கள்" ஐடி நிறுவனம் ஊழியருக்கு அறிவுறுத்தல்

"தண்ணீர் இல்லை வீட்டில் இருந்தே வேலை செய்யுங்கள்" ஐடி நிறுவனம் ஊழியருக்கு அறிவுறுத்தல்
"தண்ணீர் இல்லை வீட்டில் இருந்தே வேலை செய்யுங்கள்" ஐடி நிறுவனம் ஊழியருக்கு அறிவுறுத்தல்
Published on

சென்னையிலுள்ள ஐடி நிறுவனங்கள் தண்ணீர் இல்லாததால் அதன் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யும் படி அறிவுறுத்தியுள்ளனர். 

சென்னையில் கடந்த இரு மாதங்கள் தண்ணீர் பஞ்சம் அதிகமாக காணப்படுகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் இல்லாததும் பருவமழை பொய்த்து போனதாலும் சென்னையில் தண்ணீர் தட்டுபாடு அதிகரித்துள்ளது. மேலும் நிலத்தடி நீரும் குறைந்து போனதால் பொது மக்கள் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர். 

இந்நிலையில் சென்னையின் ஒ.எம்.ஆர் ஐடி நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யும்படி அறிவுறுத்தியுள்ளது. சென்னையின் பழைய மகாபலிபுரம் சாலையில் சுமார் 600 ஐடி நிறுவனங்கள் அமைந்திருக்கின்றன. இந்த நிறுவனங்களில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதனால் இந்த நிறுவனங்கள் தண்ணீர் தேவையை சமாளிக்க பல முயற்சிகளை எடுத்துவருகிறது. 

உதராணமாக சோளிங்நல்லூரிலுள்ள ஃபோர்டு நிறுவனம், அங்கு பணியாற்றும் ஊழியர்களை அவர்களுக்கு தேவையான குடிநீரை எடுத்து வருமாறு அறிவுறுத்தியுள்ளது. மேலும் பல நிறுவனங்கள் தங்களின் அலுவலகங்களில் தண்ணீரை குறைவாக பயன்படுத்தவும் என்ற அறிவிப்பு பலகை வைத்துள்ளன. அத்துடன் ஒரு சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை பார்க்கவும் அறிவுறுத்தியுள்ளன. 

ஒ.எம்.ஆர் பகுதிக்கு ஒருநாளைக்கு 3 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதில் பெரும்பாலான தண்ணீர் வெளியிலிருந்துதான் கொண்டு வரப்படுகிறது. இவற்றில் 60 சதவிகித தண்ணீர் ஐடி நிறுவனங்களால் பயன்படுத்தி வருகின்றன. குறிப்பாக சிப்காட் ஐடி பகுதியில் 46 ஐடி நிறுவனங்கள் உள்ளன. அவற்றிற்கு 2 மில்லியன் லிட்டர் தண்ணீர் தினமும் தேவைப்படுகிறது. இதற்கு அங்குள்ள 17 கிணறுகளிலிருந்து தண்ணீர் தரப்பட்டுவந்தது. ஆனால் தற்போது அங்கு ஒரு மில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டுமே தினமும் தரப்பட்டு வருகிறது. இதனால் அங்கு கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவிவருகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com