சகிப்புத்தன்மை இல்லை: சொமோட்டோ நிறுவனரின் பதிவுக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் பதிலடி

சகிப்புத்தன்மை இல்லை: சொமோட்டோ நிறுவனரின் பதிவுக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் பதிலடி
சகிப்புத்தன்மை இல்லை: சொமோட்டோ நிறுவனரின் பதிவுக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் பதிலடி
Published on

வாடிக்கையளர்களுக்கு சகிப்பு வேண்டும் என்ற சொமோட்டோ நிறுவனரின் அறிவுரை மன்னிப்பு அறிவிப்புக்கு எதிரானது. பிரச்னை சகிப்புத்தன்மைக்கு எதிரானது அல்ல இந்தி திணிப்புக்கு எதிரான தலைமுறை கோபம் என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் டிவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ்நாட்டை சேர்ந்த விகாஷ் என்பவர், சொமேட்டோவில் உணவு ஆர்டர் செய்துள்ளார். ஆனால், அவர் ஆர்டர் செய்த உணவு முழுமையாக டெலிவரி செய்யப்படாததால் சொமேட்டோவின் வாடிக்கையாளர் மையத்தை அணுகி பணத்தை திரும்ப கேட்ட நிலையில், அப்போது மொழி பிரச்னை இருப்பதாக சொமோட்டோ நிறுவனம் கூற, தமிழ்நாட்டில் சேவை வழங்கும் நீங்கள் தமிழ் மொழி தெரிந்தவர்களை பணிக்கு அமர்த்தி இருக்க வேண்டும் என விகாஷ் கூறியுள்ளார்.

இந்நிலையில், இந்தி, நாட்டின் தேசிய மொழி. இந்தியர்கள் அனைவரும் இந்தி மொழி தெரிந்து வைத்திருக்க வேண்டும் என சொமேட்டோ நிறுவனம் பதில் அளித்துள்ளது. இதனை படமாக எடுத்து விகாஷ் சமூகவலை தளங்களில் பதிவிட, சொமேட்டோவின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், சமூக வலைதளங்களில் ரிஜக்ட் சோமோட்டோவுக்கு எதிராக வாசகங்கள் சில ட்ரென்ட் ஆனதால் சம்மந்தப்பட்ட நபர் நீக்கப்பட்டதோடு, இந்த சம்பவத்திற்கு வருந்துவதாகவும், தமிழுக்கு தனி முக்கியத்துவம் தரப்போவதாகவும் சோமாட்டோ நிறுவனம் அறிவித்தது.

இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக சொமாட்டோவின் நிறுவனர் தீபிந்தர் கோயல் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், உணவு விநியோக நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு அதிகாரியின் சிறிய பேச்சு தேசிய பிரச்னையாக மாறியுள்ளது. நம் நாட்டில் சகிப்புத்தன்மை இல்லாமல் போய் விட்டாதா எனவும் இதற்கு யாரை குறை சொல்வது என்று தெரியவில்லை என்று குறிப்பிட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சொமோட்டோ நிறுவனரின் இந்த டிவிட்டர் பதிவுக்கு டிவிட்டரில் அவரை டேக் செய்து பதில் அளித்துள்ள மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், வாடிக்கையாளர்களுக்கு சகிப்பு வேண்டும் என்ற சொமோட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் அறிவுரை, உங்கள் நிறுவனம் வெளியிட்ட மன்னிப்பு அறிவிப்புக்கு எதிரானது. தமிழ் நாட்டின் வரலாறை அறிய வேண்டும். பிரச்னை, சகிப்பு தன்மை சம்பந்தப்பட்டது அல்ல. இந்தித் திணிப்புக்கு எதிரான தலைமுறை கோபம் என சொமோட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயலுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com