தமிழகத்தில் மாநில அரசு என்று ஒன்றே கிடையாது. மாநில அரசு இருந்தால்தானே விமர்சிக்க முடியும் என்று கூறியுள்ளார்.
சமூக செயற்பாட்டாளர்கள் மீது குண்டர் சட்டம் பாய்கிறது என்றால், தமிழகத்தில் கருத்துச் சொல்ல உரிமையில்லை என்றுதான் பொருள் என்று தரமணி திரைப்பட இயக்குநர் ராம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ராம், மாநில அரசு இருந்தால்தானே விமர்சிக்க முடியும் எனக் கூறியுள்ளார். தமிழகத்தில் கருத்துச் சுதந்திரம் இல்லை என்றும், குறைகளை கூறினால் குண்டர் சட்டம் தான் தண்டணையாகக் கிடைக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.