மீத்தேன், ஷேல் கேஸ் திட்டம் செயல்படுத்தப்படவில்லை: மத்திய அமைச்சர்

மீத்தேன், ஷேல் கேஸ் திட்டம் செயல்படுத்தப்படவில்லை: மத்திய அமைச்சர்
மீத்தேன், ஷேல் கேஸ் திட்டம் செயல்படுத்தப்படவில்லை: மத்திய அமைச்சர்
Published on

தமிழத்தில் மீத்தேன், ஷேல் கேஸ் உள்ளிட்ட எந்தத் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

மீத்தேன் திட்டம், ஷேல் கேஸ் திட்டம், நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு தமிழக மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் தமிழக மக்களின் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுவிடும் என்ற அச்சமும் தமிழக மக்கள் மத்தியில் உள்ளது.

இந்நிலையில் மக்களைவில் இன்று உறுப்பினர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழத்தில் மீத்தேன் அல்லது ஷேல் கேஸ் உள்ளிட்ட எந்தத் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என தெரிவித்துள்ளார். தமிழக அரசு மற்றும் சுற்றுச்சூழல் அனுமதியை பெற்ற பிறகே நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் உற்பத்தி தொடங்க முடியும் என தெரிவித்துள்ள அமைச்சர் தர்மேந்திர பிரதான், கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி சார்பில் எந்தப் புதிய திட்டமும் தொடங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

முன்னதாக, தமிழகத்தில் கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், சேலம் ஆகிய இடங்கள் குழாய் மூலம் இயற்கை எரிவாயு அமைப்பை ஏற்படுத்த சாத்தியமுள்ள புவியியல் இடங்களாக உள்ளதாகவும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com