தடுப்பூசி செலுத்தாத ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படாது - மதுரை தலைமை பொறியாளர்

தடுப்பூசி செலுத்தாத ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படாது - மதுரை தலைமை பொறியாளர்
தடுப்பூசி செலுத்தாத ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படாது - மதுரை தலைமை பொறியாளர்
Published on

கொரனோ தடுப்பூசி செலுத்தாத மின் ஊழியர்களுக்கு டிசம்பர் மாத சம்பளம் பிடித்தம் செய்யப்படாது என மதுரை மண்டல தலைமை பொறியாளர் புதிய தலைமுறைக்கு விளக்கம் அளித்துள்ளார். 

பிற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் மதுரை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது தெரியவந்திருக்கிறது. இந்நிலையில், மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட மின்பகிர்மான வட்டங்களில் பணிபுரியும் மின் வாரிய அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் டிசம்பர் 7ஆம் தேதிக்குள் கொரோனோ தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் தடுப்பூசி செலுத்தாத ஊழியர்களுக்கு டிசம்பர் மாத ஊதியம் நிறுத்தம் செய்யப்படும் என மதுரை மண்டல தலைமை பொறியாளர் சார்பில் அனைத்து மின்வாரிய அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. தடுப்பூசி செலுத்த முடியாதவர்கள் உரிய மருத்துவ சான்றிதழ்களை வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது, இது குறித்த செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியானதை தொடர்ந்து மின் வாரிய ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில், ஊழியர்கள் மத்தியில் கொரோனோ தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே அவ்வாறு சுற்றறிக்கையை அனுப்பப்பட்டதாகவும், ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தும் நிலையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத ஊழியர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படமாட்டாது எனவும் மதுரை மண்டல தலைமைப் பொறியாளர் உமா தேவி புதிய தலைமுறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி செலுத்தாதோர் பொதுஇடங்களுக்குச் செல்ல தடைவிதிக்கப்படுவதாக கிருஷ்ணகிரி ஆட்சியர் தெரிவித்திருந்தார். மேலும் விதியை மீறுவோர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com