மது குடிப்பதால் கல்லீரல் பாதிக்கப்படும் என நிரூபிக்கப்படவில்லை: தமிழக அரசு

மது குடிப்பதால் கல்லீரல் பாதிக்கப்படும் என நிரூபிக்கப்படவில்லை: தமிழக அரசு
மது குடிப்பதால் கல்லீரல் பாதிக்கப்படும் என நிரூபிக்கப்படவில்லை: தமிழக அரசு
Published on

மது குடிப்பதால் கல்லீரல் பாதிக்கப்படும் என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் கல்லீரல் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக தனி வார்டு அமைத்து சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசிற்கு உத்தரவிட கோரி ஆனந்த ராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில் கடந்த 2008ம் ஆண்டு சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கல்லீரல் நோய் பாதிப்பிற்கு 85,112 பேர் வெளி நோயாளிகளாகவும், 7,157 பேர் உள்நோயாளியாகவும் சிகிச்சை பெற்றிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். கடந்த 2014ம் ஆண்டில் அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாவும் சுட்டிக்காட்டியிருந்தார். மேலும் கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மதுகுடிப்பதே 80 சதவீதம் காரணம் என்றும் கூறியிருந்தார்.

இதுதொடர்பான விசாரணையில் பதில் மனு தாக்கல் செய்த தமிழக அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை, கல்லீரல் சம்பந்தமான நோய்களுக்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக தெரிவித்தது. மது அருந்துவதாகல் மட்டுமே கல்லீரல் பாதிக்கப்படுவதில்லை என்றும் தமிழக அரசின் சார்பில் ஆஜரான சுகவனம் தெரிவித்தார். மது குடிப்பதால் கல்லீரல் பாதிக்கப்படும் என அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com