திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி செல்வதற்கு இ.பாஸ் எடுத்ததற்கு இன்று வரை ஆதாரம் இல்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்
சென்னை மாதவரம் விஜிபி நகர் பார்க் அருகில் உள்ள கொரோனா தடுப்பு மையத்தை அமைச்சர் ஜெய்குமார் இன்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் "சென்னையை பொருத்தவரை முதலமைச்சர் அறிவுரைப்படி பல்வேறு துறைகள் இணைந்து செயல்படுகிறோம். சகஜ நிலை விரைவில் எட்டும். ராயபுரம் மண்டலத்தில் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டு தற்போது சமநிலை நீடிக்கிறது. தமிழகத்தில் சமூக பரவல் ஏற்படவில்லை" என்றார்.
மேலும் தொடர்ந்த அவர் " ஜெயலலிதா ஒரு வரலாற்று சிறப்புமிக்க தலைவர். அவர் வாழ்ந்த இல்லத்தை நினைவில்லமாக மாற்றுவதுதான் மக்களின் எண்ணம். எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி துண்டு அணிவித்தது கடும் கண்டனத்திற்குறியது. அதிமுக தொண்டர்கள், எம்.ஜி.ஆர் தொண்டர்களை சீண்டினால்,விளைவுகள் மோசமாக இருக்கும்" என்றார் ஜெயக்குமார்.
இ-பாஸ் குறித்து பேசிய ஜெயக்குமார் " உதயநிதி ஸ்டாலின் இன்று வரை இ-பாஸ் எடுத்ததற்கு ஆதாரம் இல்லை. எனவே சட்டத்திற்கு முன் அனைவரும் சமம். யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.