“அனைவரும் ஒன்றிணைந்தால் அதிமுக-வை இந்தியாவிலேயே யாராலும் வெல்ல முடியாது”- ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

அனைவரும் ஒன்றிணைந்தால் அதிமுக-வை யாராலும் வெல்ல முடியாது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளர்.
OPS - TTV Dhinakaran
OPS - TTV Dhinakaranpt desk
Published on

இன்று தஞ்சாவூரில் ஓபிஎஸ் ஆதரவாளரும் ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் மகன் திருமணத்தை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் ஆகியோர் இணைந்து நடத்தி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், “இன்று 7 ஆம் தேதி. எம்.ஜி.ஆருக்கு பிடித்தமான தேதி. மணமக்கள் எல்லா வளமும் பெற்று வாழ வேண்டும். அதிமுக-வை தொண்டர்களின் இயக்கமாக தோற்றுவித்தவர் எம்.ஜி.ஆர், அவரது மறைவுக்குப் பிறகு அதிமுக-வை கட்டுகோப்புடன் நடத்தியவர் ஜெயலலிதா. ஏழை எளிய மக்களின் வளர்ச்சிக்காக வழி நடத்தி தமிழகத்தில் பொற்கால ஆட்சியை எம்ஜிஆர் வழியில் நிலை நிறுத்தியவர் ஜெயலலிதா.

ops
opspt desk

அதிமுக-வை பல்வேறு சோதனைகள் மற்றும் சதி வலைகளை உடைத்து, மாபெரும் இயக்கமாக உருவாக்கினார் ஜெயலலிதா. 36 ஆண்டுகளாக ஒரு கட்சி பலமுறை ஆட்சிக்கு வந்தது என்றால் அது ஜெயலலிதாவால் தான். அதிமுக-வின் தூய தொண்டர்களின் எண்ணமே அனைவரும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்பது தான்.

தொண்டர்கள் தான் இயக்கத்தின் ஆணிவேர், அச்சாணி. மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை மலரச் செய்ய அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அப்படி ஒன்றிணைந்து அரசியல் களத்தில் விளையாடினால் நம்மளை வெல்ல இந்தியாவிலேயே யாரும் கிடையாது. அம்மாவின் ஆட்சியை அமைப்பதற்கான பிள்ளையார் சுழி இன்று போடப்பட்டுள்ளது.

OPS - TTV Dhinakaran
OPS - TTV Dhinakarantwitter page

தஞ்சையில் எது செய்தாலும் வெற்றி தான். அதிமுகவில் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது தான் ஜெயலலிதா ஆன்மாவின் எண்ணமாக இருக்கும்” என பேசினார்.

முன்னதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் பேசுகையில், “சிலரின் பேராசையால் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கனத்த இதயத்தோடு பிரிந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தொடங்கினோம். இப்போது 6 ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுக நிர்வாகிகள் ஒரே மேடையில் சந்திப்பது மகிழ்ச்சி. இன்று திருமணம் மற்றும் இணைப்பு விழா மகிழ்ச்சி என இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது. பழைய நண்பர்களை சந்திப்பது மகிழ்ச்சி. இதற்காக வைத்திலிங்கத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

OPS - TTV Dhinakaran
OPS - TTV Dhinakaran

அமமுக - அதிமுகவுடன் இணைந்து செயல்பட தொடங்கிவிட்டது. இந்த இணைப்பு துரோகிகளுக்கு பாடம் கற்பிக்கும். திமுகவை அகற்றி, எந்த மனமாற்றத்திற்கும் இடம் கொடுக்காமல் அனைவரும் இணைந்து செயல்படுவோம்” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com