ஞாயிற்றுக் கிழமைகளிலும் பெட்ரோல் பங்குகள் வழக்கம்போல் செயல்படும் என தமிழக பெட்ரோல், டீசல் விற்பனையாளர் சங்க தலைவர் முரளி தெரிவித்துள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஞாயிற்றுக் கிழமைகளில் பெட்ரோல் பங்க்குகள் செயல்படாது என்றும், மே மாதம் 14-ம் தேதியில் இருந்து அனைத்து பெட்ரோல் பங்குகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் என பெட்ரோல் டீசல் விற்பனையாளர்கள் சங்கம் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தது.
இந்நிலையில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் வேண்டுகோளை ஏற்று பெட்ரோல் பங்க்குகளின் விடுமுறை முடிவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும், ஞாயிற்றுக் கிழமைகளிலும் பெட்ரோல் பங்குகள் வழக்கம்போல் செயல்படும் என தமிழக பெட்ரோல் டீசல் விற்பனையாளர் சங்க தலைவர் முரளி தெரிவித்துள்ளார்.