“மாணவ மாணவியர்களுக்கு இலவச பஸ் பாஸ் கிடையாது”- அம்பேத்கர் சட்டக் கல்லூரி நிர்வாகம் அறிக்கை

“மாணவ மாணவியர்களுக்கு இலவச பஸ் பாஸ் கிடையாது”- அம்பேத்கர் சட்டக் கல்லூரி நிர்வாகம் அறிக்கை
“மாணவ மாணவியர்களுக்கு இலவச பஸ் பாஸ் கிடையாது”- அம்பேத்கர் சட்டக் கல்லூரி நிர்வாகம் அறிக்கை
Published on

அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு, இலவச பஸ் பாஸ் கிடையாது என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்த கல்லூரி முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவ மாணவிகள் மாநகரப் பேருந்துகளில் பயணம் செய்து கல்லூரிக்கு வந்து செல்வதற்கு இலவச பயணச் சலுகை அட்டை ஏதும் கிடையாது. ஆகவே மாணவ - மாணவியர், கல்லூரி அடையாள அட்டையைக் காட்டி, கட்டணத்தில் சலுகை பெற்று பேருந்துகளில் பயணம் செய்யலாம்.

சலுகை கட்டண அட்டை இல்லாத மாணவ, மாணவிகள் கட்டாயம் பயணச் சீட்டை பெற்றுதான் பயணம் செய்ய வேண்டும். இவையன்றி கல்லூரி அடையாள அட்டையை மட்டும் காண்பித்து இலவச பயணச் சலுகை கோருவதோ, நடத்துனர், ஓட்டுநர் மற்றும் பயணச்சீட்டு பரிசோதகரிடத்தில் விதியை மீறி தகராறு மற்றும் ஒழுங்கீனமாகவோ நடப்பது தெரியவந்தால் அம்மாணவ மாணவிகள் மீது கல்லூரி மாணவர்களின் நடத்தை விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்யக் கூடாது. பேருந்தில் பயணிக்கும் போது ஒழுங்காக பயணிக்க வேண்டும். இலவச பஸ் பாஸ் கோரி மாணவர்கள் சமர்ப்பித்த மனு, அரசிடம் மேல் நடவடிக்கைக்காக அனுமதி வைக்கப்பட்டுள்ளது. அரசிடமிருந்து தெளிவுரை பெறும் வரை மேல் குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கையே தொடரும்” என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com