இருளில் மூழ்கிய கொல்லிமலை கிராமங்கள்

இருளில் மூழ்கிய கொல்லிமலை கிராமங்கள்
இருளில் மூழ்கிய கொல்லிமலை கிராமங்கள்
Published on

கொல்லிமலையில் தொடர் மழை காரணமாக கடந்த 3 நாட்களாக மின்சாரம் இன்றி மலைவாழ் மக்கள் தவித்து வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் கடந்த 3 நாட்களாக இரவு பகலாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மலை கிராமங்களுக்கு மின்சாரமும் தடைபட்டுள்ளது. இதனால் செல்போன் சேவையும் முடங்கியுள்ளது. கடந்த 3 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் தாங்கள் பெரும் அவதிப்படுவதாகவும், அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். 

இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது தொடர் மழை காரணமாக மின் வழித்தடத்தில் ஆங்காங்கே மரம் விழுந்ததால் மின் விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதாகவும் மரங்களை அகற்றி படிப்படியாக மின்சாரம் வழங்கி வருவதாகவும் தெரிவித்தனர்.

ஒகி புயல் காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. சீர்காழியில் அதிகபட்சமாக 18 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது, கொள்ளிடத்தில் 16 சென்டி மீட்டர் மழையும், தலைஞாயிறு பகுதியில் 11 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. தொடர் கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழந்ததால் பொதுமக்கள் அவதி ஆளாகி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com