காய்கறிகளுக்கு நிகராக போட்டி போட்டுக்கொண்டு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்லும் பெட்ரோல், டீசலின் விலையானது கடந்த 596 நாள்களாக எந்தவித மாற்றமும் பெறாமல் விற்பனையாகி வருகிறது.
அதன்படி,சென்னையில் இன்று (07.01.2024) 1 லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.102.63 என்றும், டீசலின் விலை ரூ.94.24 என்றும் விற்பனை செய்யப்படுகிறது.
பொது எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப உள்நாட்டில் பெட்ரோல், டீசலின் விலையை நிர்ணயம் செய்யும். இந்தியா தனது கச்சா எண்ணெய்க்கான தேவையை 85 சதவீதம் சர்வதேச நாடுகளிடம் இருந்து இறக்குமதியில் நிறைவு செய்துகொள்கிறது.
குறிப்பாக பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) போன்ற எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச எண்ணெய் விலையை அடிப்படையாக வைத்து விலையை நிர்ணயம் செய்து கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.