நான்கு வழிச்சாலை திட்டத்திற்கு இடையூறாக இருப்பதாக கூறி கடலூரி என்.எல்.சி ஆர்ச் இடிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி-வடலூர் நெடுஞ்சாலையில், நெய்வேலி நகரப்பகுதிக்கு செல்லும் நுழைவாயிலில் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் (என்.எல்.சி) சார்பில் இரண்டு வளைவுகள் (ஆர்ச்) அமைக்கப்பட்டிருந்தது. இந்த வளைவுகள் என்எல்சி-ன் அடையாளமாக பல ஆண்டு காலமாக திகழ்ந்து வந்தது.
அந்த பகுதியும் 'ஆர்ச் கேட்' என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த இரண்டு ஆர்ச்சுகளில் ஒன்று நேற்று இடிக்கப்பட்டது. மற்றொன்றும் ஓரிரு நாட்களில் இடிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. விக்கிரவாண்டி - தஞ்சாவூர் நான்கு வழிச்சாலை திட்டத்திற்கு இடையூறாக வளைவுகள் இருப்பதால் இடிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.