புயல் பாதிப்புகளை பார்வையிடும் வழியில் சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்

புயல் பாதிப்புகளை பார்வையிடும் வழியில் சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்
புயல் பாதிப்புகளை பார்வையிடும் வழியில் சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்
Published on

கடலூரில் நிவர் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழியில் திருமணம் செய்துகொண்டு வந்த மணமக்களை காரைவிட்டு கீழிறங்கி வாழ்த்திய புகைப்படமும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

தெற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் உருவான நிவர் புயலால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று அதிகாலை 2.30 மணிக்கு பாண்டிச்சேரிக்கு அருகேயுள்ள மரக்காணத்தில் நிவர் புயல் கரையைக் கடந்தது. பாண்டிச்சேரிக்கு மிக அருகிலேயே இருக்கும் மாவட்டம் என்பதால் கடலூரிலும் புயல் பாதிப்புகள் அதிகமாகவே இருந்தன.

இதனால், நேற்று கடலூரில் புயல் பாதிப்புகளைப் பார்வையிட சாலை வழியாக காரில் சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி திடீரென்று காரை நிறுத்தி வழியில் திருமணம் செய்துகொண்டு வந்த மணமக்களை மனதார வாழ்த்தியுள்ளார். அதோடு,  காலில் விழுந்த அவர்களை செருப்பை கழட்டிவிட்டு ஆசிர்வதமும் செய்துள்ளார்.

இந்தத் தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் அதிமுகவினர் பகிர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் செயலை பாராட்டி வருகிறார்கள். அவர்கள் பகிர்ந்துள்ள வீட்டியோவில் சாலையில் இருக்கும் மணமக்கள் ‘ஆசிர்வாதம் பண்ணிட்டுப் போங்க’ என்று கத்துகிறார்கள். உடனடியாக காரைவிட்டு இறங்கி ஆசிர்வாதம் செய்வதோடு புகைப்படமும் எடுத்துக்கொள்கிறார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com