வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ள நிவர் புயல் கரையை கடக்க தொடங்கியது. காரைக்கால் மற்றும் மகாபலிபுரத்திற்கு இடையே புயல் கரையை கடக்கும் என வானிலை மைய அதிகாரிகள் கணித்திருந்தனர்.
அதன் எதிரொலியாக சென்னை உட்பட வட தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கின்ற மக்கள், வீடில்லாமல் தவிப்பவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் பத்திரமாக மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அந்த விவரங்களை மாநகராட்சி துணை ஆணையர் மேகானந்த் ரெட்டி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். மொத்தமாக 53 முகாம்களில் 2700 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு உணவு கொடுக்கப்படுகிறது.
அது தவிர நகரின் மற்ற பகுதிகளில் உள்ள 7000 பேருக்கு உணவு கொடுக்க படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.