நிவர் புயல் காரைக்காலுக்கும் மகாபலிபுரத்துக்கும் இடையே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், புயலின் திசைமாற வாய்ப்புள்ளது என்று தனியார் வானிலை ஆய்வாளர் வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதீப் ஜான் தெரிவித்துள்ளதாவது “ தற்போதுள்ள சூழலில் 60-70 சதவீதம் கடலூர் அருகே நிவர் புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளது. 25 ஆம் தேதி பிற்பகலில் புயல் நெருக்கமாக வரும்போது திசை மாறுவதற்கும் வாய்ப்புள்ளது. புயல் வலுவடைகிறதா அல்லது வலுவிழக்கிறதா என்பதை பொறுத்து எந்த இடத்தில் புயல் கரையை கடக்கும் என நாளை முடிவு செய்யலாம். கடலூர் மாவட்டத்தில் மிக கனமழை பொழியும் வாய்ப்புள்ளது, ஒருவேளை மகாபலிபுரம் அருகே புயல் கரையை கடந்தால் சென்னைக்கும் மிக கனமழை வாய்ப்புள்ளது” என தெரிவித்துள்ளார்.