‘ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, மாநிலக்கட்சி எல்லாமே எனக்கு எதிராக உள்ளது’ - நித்யானந்தா புகார்

‘ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, மாநிலக்கட்சி எல்லாமே எனக்கு எதிராக உள்ளது’ - நித்யானந்தா புகார்
‘ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, மாநிலக்கட்சி எல்லாமே எனக்கு எதிராக உள்ளது’ - நித்யானந்தா புகார்
Published on

இந்திய அரசு, ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, மாநிலக்கட்சி என அனைத்து தரப்பினரும் தமக்கு எதிராக செயல்படுவதாக ஐநா மனித உரிமை ஆணையத்தில் நித்யானந்தா புகார் அளித்திருப்பது தெரியவந்துள்ளது. மனித உரிமைகள் அமைப்புக்கு கடந்த ஆண்டு அவர் சார்பில் அனுப்பப்பட்ட புகார் மனு புதிய தலைமுறைக்கு கிடைத்துள்ளது.

‌சமூக வலைத்தளங்களில் மட்டுமல்ல ஐக்கிய நாடுகள் சபையிடமே இப்படித்தான் கதறியுள்ளார் நித்யானந்தா. ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இந்திய அரசு மீதும், தேசிய - மாநிலக் கட்சிகள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ஐ.நா. மனித உரிமை ஆணையத்துக்கு 46 பக்கங்கள் கொண்ட கடிதத்தை நித்தியானந்தா அனுப்பியுள்ளார். தானும், தன் சீடர்களும், தங்கள் ஆசிரமும் பல்வேறு தருணங்களில் தாக்கப்பட்டதாக சில புகைப்படங்களையும் அந்த கடிதத்தில் அவர் இணைத்துள்ளார்.

பாஜக மற்றும் பிற இந்து அமைப்புகள், சிறுபான்மையினராக உள்ள ஆதி சைவ மதத்தினரை அச்சுறுத்துவதாக அந்த கடிதத்தில் குற்றம்சாட்டியுள்ள நித்தியானந்தா, தமிழகத்தில் உள்ள திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளும், இஸ்லாமிய, இந்து அமைப்புகளும் உளவியல் ரீதியாக தங்களை புண்படுத்துவதாகவும் புகார் அளித்துள்ளார். 

9 பாலினங்களையும், ஓரின சேர்க்கையையும், பெண்களுக்கான உரிமைகளையும் தங்களின் ஆதி சைவ மதம் ஆதரிப்பதாகவும், ஆனால், பாஜக உள்ளிட்ட அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களை தாக்குவதாகவும் ஐ.நா.வுக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார். மேலும் ஆதி சைவ மதத்தில் உள்ள பெண் சன்னியாசிகளை கைது செய்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் நித்தியானந்தா பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 

கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் தன் மீது 150 பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஐ.நா. இதற்கு தீர்வு காண வேண்டும் எனவும் நித்யானந்தா அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com