மதுரை மத்திய சிறையில் நடந்த மகளிர் தின விழாக் கொண்டாட்டத்தில், மாணவர்களைத் தவறாக வழிநடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் சிறை சென்ற பேராசிரியை நிர்மலாதேவி, ஏராளமான பரிசுகளை வென்றார்.
கல்லூரி மாணவிகளை தறவாக நடத்த முயன்ற வழக்கில் கல்லூரி உதவி பேராசிரியையான நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 200 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ள பேராசிரியை நிர்மலாதேவிக்கு பலமுறை ஜாமீன் மறுக்கபட்ட நிலையில் மதுரை பெண்கள் மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில் மார்ச் 8-ம் தேதியான நேற்று சர்வதேச மகளிர் தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் தமிழகத்திலும் சிறையில் உள்ள பெண் கைதிகள் மகளிர் தின விழாவை கொண்டாடி உள்ளனர்.
அதில் மதுரை பெண்கள் மத்திய சிறையில் மகளிர்தின விழா கொண்டாட்டத்தின் போது, பேராசிரியர் நிர்மலாதேவி ஏராளமான பரிசுகளை வென்றுள்ளார். சிறையில் பெண் சிறைவாசிகள் மற்றும் பெண் ஊழியர்களுக்கான நடத்தப்பட்ட மகளிர் தின நிகழ்ச்சியில் கும்மிபோட்டி, பேச்சுபோட்டிகளில் கலந்துகொண்ட பேராசிரியை நிர்மலாதேவி பல பரிசுகளை வென்றுள்ளார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறைக் கண்காணிப்பாளர் பரிசுகளை வழங்கினார்.