கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிர்மலா சீதாராமன் நாளை ஆய்வு

கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிர்மலா சீதாராமன் நாளை ஆய்வு
கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிர்மலா சீதாராமன் நாளை ஆய்வு
Published on

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை ஆய்வு மேற்கொள்கிறார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசின் உதவியை தவிர தன்னார்வலர்கள் பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். சிலர் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டு அதன்மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட பொருட்களை வழங்கி வருகின்றனர். இருப்பினும் வீடு, உள்ளிட்ட உடைமைகள் முழுவதுமாக சேதமடைந்துள்ளதால் மக்கள் அன்றாட உணவிற்கே திண்டாடுகின்றனர்.

இதனிடையே கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களை கடந்த 20-ஆம் தேதி ஆய்வு செய்த முதலமைச்சர் பழனிசாமி இன்று நாகை மாவட்டத்தில் ஆய்வு செய்தார். தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்திலும் ஆய்வு செய்து மக்களின் குறைகளை முதலமைச்சர் கேட்க உள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு நிவாரணப் பொருட்களையும் முதலமைச்சர் வழங்கி வருகிறார்.

இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை ஆய்வு செய்ய உள்ளார். இதற்காக நாளை தமிழகம் வரும் நிர்மலா சீதாராமன் பிற்பகலில் தனது ஆய்வை மேற்கொள்ள உள்ளார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் ஏற்கெனவே ஆய்வு மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com