குமரி மாவட்டத்தில் நிர்மலா சீதாராமன் ஆய்வு: ஒபிஎஸ் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை

குமரி மாவட்டத்தில் நிர்மலா சீதாராமன் ஆய்வு: ஒபிஎஸ் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை
குமரி மாவட்டத்தில் நிர்மலா சீதாராமன் ஆய்வு: ஒபிஎஸ் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை
Published on

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயலின் கோரத்தாண்ட‌வத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்து வருகிறார்.

ராணுவ விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்திறங்கிய அவர், அங்‌கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி சென்றடைந்தார். விருந்தினர் மாளிகையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள்‌ ஆர்.பி.உதயகுமார், தங்கமணி, ஜெயக்குமார் ஆகியோரை சந்தித்த நிர்மலா சீதாராமன், மீட்பு நடவடிக்கைகள் குறித்து அவர்களிடம் கேட்டறிந்தார்.

சுமார் அரைமணி நேரம் நடைபெற்ற அந்த சந்திப்புக்கு பின்பு சுசீந்திரம் பகுதிக்கு சென்ற அவர், குடியிருப்பு பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார். அதைத்தொடர்ந்து சுங்கான்கடை சென்ற நிர்மலா சீதாராமன், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை கேட்டறிந்தார். அதன் பிறகு வில்லுக்குறி, திக்கனமக்கோடு, நீரோடி ஆகிய பகுதிகளுக்கு செல்லவுள்ள நிர்மலா சீதாராமன், புயல் பாதிப்புகளை பார்வையிட்டு மக்களிடம் குறைக‌ளை கேட்டறிய உள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com