பிடிபட்டது 'சங்கர்' யானை: கும்கி யானைகள் உதவியுடன் மரக்கூண்டில் அடைப்பு!

பிடிபட்டது 'சங்கர்' யானை: கும்கி யானைகள் உதவியுடன் மரக்கூண்டில் அடைப்பு!
பிடிபட்டது 'சங்கர்' யானை: கும்கி யானைகள் உதவியுடன் மரக்கூண்டில் அடைப்பு!
Published on

நீலகிரியில் 2 மாதங்களுக்கு பிறகு பிடிபட்ட காட்டு யானை சங்கர், கும்கி யானைகள் உதவியுடன் முதுமலை கொண்டு செல்லப்பட்டது.


நீலகிரி மாவட்டம் சேரம்பாடி பகுதியில் 3 பேரை கொன்ற காட்டு யானை சங்கரை பிடிக்கும் பணி 7 வது நாளாக நேற்று தொடர்ந்தது. கூடுதலாக வரவழைக்கபட்ட வன கால்நடை மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் யானையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக சங்கர் யானை கூட்டத்துடன் நின்ற 10 லைன் வனப்பகுதியில் மரத்தின் மீது பரண் அமைக்கப்பட்டது. மரத்தின் அடியில் பழங்களை கொட்டி வைத்து, மருத்துவர்கள் பரண் மீது அமர்ந்து காத்திருந்தனர்.


இதைத் தொடர்ந்து வனத்துறை பணியாளர்களும் பட்டாசுகள் வெடித்து யானைகளை பரண் நோக்கி விரட்டினர். பரண் அருகே வந்த யானை பழங்களை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, இரண்டு மருத்துவர்களும் அடுத்தடுத்து மயக்க ஊசிகளை செலுத்தினர். மயக்கமடைந்த யானை சங்கர் சிறது தூரம் ஓடி நின்றது. பின்பு தயாராக இருந்த கும்கி யானைகள் அருகில் இருந்த மற்ற யானைகளை விரட்டி அடித்தது.


இதையடுத்து துரிதமாக செயல்பட்ட யானை பாகன்கள் சங்கரை கயிறு மூலம் கட்டி கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் 5 கும்கி யானைகள் உதவியுடன் சங்கர் யானையை லாரியில் ஏற்றிச்சென்று முதுமலையில் மரக்கூண்டில் அடைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com