நீலகிரி - ஸ்டிராங் ரூமில் செயலிழந்த CCTV.. கேள்வி எழுப்பும் கட்சியினர்.. ஆட்சியர் சொல்வதென்ன?

நீலகிரி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் சிசிடிவி கேமராக்கள் செயல் இழந்தது குறித்து மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் அருணா
மாவட்ட ஆட்சியர் அருணா pt web
Published on

நீலகிரி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. ஜூன் மாதம் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள சூழலில், அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசியல் கட்சியினர் மற்றொரு அறையில் இருந்து இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை கண்காணித்து வந்த நிலையில் திடீரென அங்கு கேமராக்கள் செயல் இழந்தது. 20 நிமிடங்கள் சிசிடிவி காட்சிகள் பதிவாகாததால் அங்கிருந்த அரசியல் கட்சியினர் இதுகுறித்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு குறித்து விளக்கம் அளித்துள்ள மாவட்ட ஆட்சியர் அருணா, அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என தெரிவித்துள்ளார். வெப்பத்தை தணிக்க குளிர்விப்பான்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும், வருங்காலத்தில் கூடுதல் கணினி பொறியாளர்கள் வரவழைக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் இதுகுறித்து பேசுகையில், “நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில், குறிப்பாக கட்சியினர் பார்க்கும் திரையில் 20 நிமிடங்களுக்கு காட்சிகள் ஏதும் பதிவாகவில்லை. தொழில்நுட்ப தவறுகள் ஏற்படாமல் கண்காணிக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் முறையான பணி. 24 மணி நேரமும் தேர்தல் ஆணையம் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும். எவ்வித ஐயத்திற்கும் இடமில்லாமல் தேர்தல் ஆணையம் முறையாக பணி செய்ய வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com