விதிகளை மீறியது உண்மைதான்.. வேதாந்தாவுக்கு கருணை காட்டியிருக்கலாம் - மூவர் குழு

விதிகளை மீறியது உண்மைதான்.. வேதாந்தாவுக்கு கருணை காட்டியிருக்கலாம் - மூவர் குழு
விதிகளை மீறியது உண்மைதான்.. வேதாந்தாவுக்கு கருணை காட்டியிருக்கலாம் - மூவர் குழு
Published on

விதிகளை மீறியது உண்மைதான், இருப்பினும் வேதாந்தா நிறுவனத்திடம் கருணை காட்டியிருக்கலாம் என ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்த மூவர் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் தடியடி நடத்தி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனிடையே அந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தமிழக அரசு உத்தரவிட்டது. 

இந்த விவகாரத்தில், ஸ்டெர்லைட் ஆலை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை பசுமை தீர்ப்பாயம் அமைத்தது. ஆய்வு மேற்கொண்ட அக்குழு சீல் இடப்பட்ட அறிக்கை ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. அந்த அறிக்கையின் முக்கிய அம்சங்களை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தெரிவித்தது. அதன்படி ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசின் முடிவை நியாயப்படுத்த முடியாது. ஆலையை மூட உத்தரவிட்டது இயற்கை நியதிக்கு முரணானது. முறையாக நோட்டீஸ் அனுப்பியிருக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மூவர் குழுவின் 205 அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலை பல சுற்றுச்சூழல் விதிகளை மீறியுள்ளதை மூவர் குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

மூவர் குழு தனது அறிக்கையில், “ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழல் விதிகளை வெளிப்படையாகவே மீறியுள்ளது. இவையனைத்தும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தெரிந்தும் பல ஆண்டுகள் நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளது. ஆலையை நிரந்தரமாக மூடுவதற்காக தமிழ்நாடு அரசு சொல்லும் காரணங்கள் போதுமானதாக இல்லை

சட்டவிரோதமாக ஆலையை இயக்கியது உள்ளிட்ட தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் கூறிய நிறைய குற்றச்சாட்டுக்கள் ஏற்புடையதுதான். இருப்பினும், வேதாந்தா நிறுவனத்துடனான அணுகு முறையில் கொஞ்சம் கருணை காட்டியிருக்கலாம். மேலும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் இயற்கை நீதிக்கான கொள்கைகளை மீறியுள்ளது. ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட வேண்டும்” என அந்தக் குழு கூறியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com