புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக தருமபுரியில் தொழுநோயால் பாதிக்கப்பட்டோர் மறுவாழ்வு மையத்தில் வருவாய்த் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி ஊராட்சியில் உள்ள பாரதியார் நகர் தொழுநோயால் பாதிக்கப்பட்டோர் மறுவாழ்வு மையத்தில் சாலை, கழிவுநீர் கால்வாய் தூர்வாருதல், நீண்ட தூரம் நியாய விலை கடைக்கு செல்லமுடியவில்லை உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து, நேற்று புதிய தலைமுறையில் செய்தி வெளியானது.
இதனைத் தொடர்ந்து பாரதியார் நகரில் ஆய்வு செய்ய தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி, வருவாய்த் துறையினருக்கு உத்திரவிட்டார். இதையடுத்து இன்று துணைப் பதிவாளர் (பொது வினியோகத் திட்டம்) மணிகண்டன் தலைமையில் வருவாய்த் துறையினர் ஆய்வு செய்தனர்.
இதையடுத்து நகரும் நியாய விலை கடையில் மூலம் பாரதியார் நகரில் பொருட்கள் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.