பட்டினம்பாக்கம் அடையாறு முகத்துவாரத்தில் மருத்துவக் கழிவுகள் ஊசிகள் கொட்டப்பட்ட செய்தி புதிய தலைமுறையில் வெளியான நிலையில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து அகற்றினர்.
பட்டினம்பாக்கம் அடையாறு முகத்துவாரத்தில் இருந்து நொச்சிக்குப்பம் வரையில் உள்ள கடற்கரை பகுதிகளில் மருத்துவக் கழிவுகள் அதிக அளவில் கொட்ட படுவதாக புதிய தலைமுறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அடையாறு முகத்துவாரத்தில் இருந்து நொச்சிக்குப்பம் வரையிலுள்ள 2.5 கிலோ மீட்டர் கடற்கரையில் இன்று காலை கள ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கிருந்து மருத்துவக் கழிவுகள் குப்பைகள் ஊசிகள் நெகிழிப் பொருட்கள் மருந்து பாட்டில்கள் போன்றவை மண்ணுக்குள் புதைந்து இருப்பது தெரியவந்தது. முகத்துவாரம் பகுதியில் மட்டும் 500க்கும் மேற்பட்ட பயன்படுத்தப்பட்ட மருத்துவ ஊசிகள், மருந்து பாட்டில்கள், கடற்கரை மண்ணுக்குள் புதைந்து இருந்தது. நடைப்பயிற்சி உடற்பயிற்சி மேற்கொள்வோர் நாள்தோறும் அந்தப் பகுதிகளில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்ட தடுப்பூசிகள் இருந்ததாக கூறினர்.
மேலும் 5 நாட்களுக்கும் மேலாக இந்த பகுதிகளில் இதுபோன்ற மருத்துவக் கழிவுகள் அதிக அளவில் கிடப்பதாக அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், மீனவர்கள் தெரிவிக்கின்றனர். கொரோனா காலத்தில் அதிக அளவில் மருத்துவ கழிவுகள் வெளியேற்றம் மற்றும் சமூக விரோதிகளின் பயன்பாடு காரணமாக இந்த பகுதிகளில் அதிக அளவு குப்பைகள் மற்றும் மருத்துவக் கழிவுகள் வெளியேற்றும் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் அடையாறு கரையோரத்தில் இருந்து சமூக விரோதிகளால் வெளியேற்றப்படும் மருத்துவக் கழிவுகள் அடித்து வரப்பட்டு கடற்கரைப் பகுதிகளில் குவிந்து கிடக்கின்றது