மதுரை பல்கலைக் கழகப் புதிய துணைவேந்தர் நியமனம்

மதுரை பல்கலைக் கழகப் புதிய துணைவேந்தர் நியமனம்
மதுரை பல்கலைக் கழகப் புதிய துணைவேந்தர் நியமனம்
Published on

மதுரை பல்கலைக் கழகத் துணைவேந்தராக கிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளை அம்பலப்படுத்தி, பி.பி.செல்லதுரையின் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் அதன் மதுரை மாவட்ட செயலாளர் லயனல் அந்தோணிராஜ் கடந்த 2017-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம் செல்லத்துரையின் நியமனம் செல்லாது என தீர்ப்பளித்தது.

இதையடுத்து செல்லத்துரை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால் உச்சநீதிமன்றமும் நியமனம் செல்லாது என தீர்ப்பளித்தது. இதனைத்தொடர்ந்து இந்திராகாந்தி திறந்தநிலை பல்கலைக் கழக துணை வேந்தராக இருந்த நாகேஸ்வரராவ் தலைமையில் துணைவேந்தர் பதவிக்கு தேடுதல் குழு புதிதாக அமைக்கப்பட்டிருந்தது.

அப்போது இந்தத் துணைவேந்தர் பதவிக்காக 196 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் பத்து பேர் தேர்வு செய்யப்பட்டு நேர்காணலில் 3 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அந்த 3 பேரின் பட்டியல் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் சமர்பிக்கப்பட்டிருந்தது. தேர்வு செய்யப்பட்ட 3 பேரையும் ஆளுநரும் பல்கலைகழகங்களின் வேந்தருமான பன்வாரிலால் புரோகித் நேர்காணல் செய்து எம்.கிருஷ்ணனை நியமனம் செய்வதாக அறிவித்துள்ளார். துணைவேந்தர் நியமனத்திற்கான ஆணையை எம்.கிருஷ்ணன் ஆளுநரிடம் பெற்றுக்கொண்டார்.

எம்.கிருஷ்ணன் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் துறைத்தலைவராக இருந்திருக்கிறார். மேலும், ராஜஸ்தானில் உள்ள மத்திய பல்கலைக் கழகத்திலும் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். இதேபோல் லண்டனில் உள்ள ராயல் எண்டமாலிடிகல் சொசைட்டியில் ஆராய்ச்சியாளராக பணியில் இருந்துள்ளார். 28 ஆண்டுகள் ஆசிரியர் துறையில் எம்.கிருஷ்ணன் இருந்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com