4ஜி சிம்மை 5ஜியாக மாற்றி தருவதாக புது மோசடி நடந்து வருவதாகவும், பொதுமக்கள் யாரும் சுய விபரங்களை கொடுத்து ஏமாற வேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஓடிபி உள்ளிட்ட தகவல்களை பகிர்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
4ஜி சிம்கார்டை, 5ஜி சிம்கார்டாக மாற்றி தருவதாக இணைய குற்ற மோசடிக்காரர்கள் புதுவித மோசடியில் ஈடுபடுவதாக காவல்துறை
எச்சரித்துள்ளது. எனவே, இது தொடர்பாக வரும் தொலைபேசி அழைப்புகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என காவல்துறை
அறிவுறுத்தியுள்ளது.
முன்பின் அறியாத எண்களில் இருந்து வரும் லிங்கை சுட்டி, ஒருமுறை பயன்படுத்தும் ரகசிய எண்ணை தெரிவிக்க வேண்டாம் எனவும், அதே போல் வங்கி எண் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம் எனவும் காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.