முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகையை ஒட்டி அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அவசர அவசரமாக தார் சாலைகள் போடப்படுவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அரியலூரில் வரும் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவுள்ளார். அதற்காக, பாதாள சாக்கடை திட்டம் நிறைவுபெறாத பகுதிகளிலும், பள்ளங்களுக்கு மேல் மூடிப்போட்டு தார் சாலை போடப்பட்டு வருகிறது.
இதனால், பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படுமா அல்லது கிடப்பில் போடப்படுமா என்று மக்கள் குழப்பமடைந்துள்ளனர். இதுகுறித்து நகராட்சி ஆணையர் வினோத்திடம் கேட்டபோது முதலமைச்சர் நிகழ்ச்சி முடிந்தவுடன் பாதாள சாக்கடை மூடி உள்ள இடங்களில் தார் வெட்டி அப்புறப்படுத்தப்படும் என தெரிவித்தார்.