பத்திரப்பதிவில் ஆள்மாறாட்டம் நடைபெறுவதை தடுக்கும் வகையில் சார்பதிவாளர் அலுவலகங்களில் பிப்ரவரி 8ம் தேதி முதல் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.
ஆள்மாறாட்ட தவிர்க்கும் விதத்தில் ஆதார் வழி அடையாளம் காண புதிய விதிகளை பதிவுத்துறை உருவாக்கியுள்ளது. பத்திரப்பதிவில் ஆள்மாறாட்டம் நடைபெறுவதை தடுக்கும் வகையில் நெல்லை மண்டலத்தில் 85, சேலத்தில் 50 சார்பதிவாளர் அலுவலகங்கள் என மொத்தம் 135 அலுவலகங்களில் பிப்ரவரி 8ம் தேதி முதல் ஆவணதாரரை ஆதார் மூலம் அடையாளம் காணும் நடைமுறை அமலுக்கு வருகிறது.
இத்திட்டத்தை விரிவுபடுத்த ஏதுவாக உடனடியாக மேற்படி இரண்டு மண்டலங்களுக்கு தனி சர்வீஸ் பொறியாளர்கள் நியமிக்கப்பட்டு புதிய கணினி தேர்ந்தெடுத்து தேவையான மென்பொருளை நிறுவிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது .
திருநெல்வேலி மற்றும் சேலம் மண்டலத்தில் உள்ள அலுவலகங்களில் இந்த நடைமுறையை செயல்படுத்தி குறைகள் இருப்பின், அந்த அறிக்கையை மின்னஞ்சல் மூலம் பதிவுத் துறைக்கு அனுப்பி வைக்க கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே 253 அலுவலகங்களில் இந்த நடைமுறை செயல்படுத்த பட்டு வருகிறது.