கொரோனா நோயாளிகள் படுக்கை பெற தமிழக அரசு சார்பில் புதிய டிவிட்டர் கணக்கு தொடக்கம்!

கொரோனா நோயாளிகள் படுக்கை பெற தமிழக அரசு சார்பில் புதிய டிவிட்டர் கணக்கு தொடக்கம்!
கொரோனா நோயாளிகள் படுக்கை பெற தமிழக அரசு சார்பில் புதிய டிவிட்டர் கணக்கு தொடக்கம்!
Published on

கொரோனா நோயாளிகளுக்கு படுக்கைகள் தேவைப்பாட்டால் அது குறித்து கோரிக்கை வைப்பதற்காக, தமிழக அரசு சார்பில் புதிய டிவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதி கேட்டும், படுக்கை வசதி கேட்டும் தினந்தோறும் ஏராளமானோர் டிவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றும் வகையில் தமிழக அரசு சார்பில் ஒருங்கிணைந்த கட்டளை மையத்தை அமைத்துள்ளனர். ’மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள் மற்றும் ஆக்சிஜன் வசதிகளை நோயாளிகளுக்கு அளிப்பதை நிர்வகிக்கும் சிறப்பு மையமாக இது செயல்படும்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, படுக்கைகள் தேவைப்படுபவர்களுக்கு ஆதரவாக @104‌‌GoTN ‌‌‌‌‌‌‌என்ற டிவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இந்த டிவிட்டர் வசதியை பிரபலப்படுத்த #BedsForTN என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. படுக்கைகள் கிடைப்பது தொடர்பாக இதனை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com