கொரோனா அதிகரித்து வருவதை கருத்தில்கொண்டு புதிய கட்டுப்பாடுகள் நாளைமுதல் அமலுக்கு வருகிறது.
அதன்படி வழிபாட்டுத் தலங்களில் இரவு 8 மணிவரை வழிபடலாம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இரவு 10 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் வழிபாட்டுத் தலங்களில் திருவிழாக்கள், மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை எனவும் அறிவித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் கடற்கரைகளில் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் மக்கள்கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.
தியேட்டரில் 50% இருக்கைகளுடன், புதிதாக வெளியிடப்படும் திரைப்படங்களை கூடுதலாக ஒரு காட்சி திரையிடலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.